Thursday 22 March 2018

BSNLன் புத்தாக்கத்திற்கு அரசின் புதிய திட்டங்கள்?

BSNLன் புத்தாக்கத்திற்காக 25,000 கோடி ரூபாய்களுக்கான அரசின் திட்டங்கள் BSNLக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் 09.03.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பரவலாக பல பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளில் வெளி வந்துள்ளது. இந்த செய்தி, ஏதோ அரசாங்கம் BSNLன் புத்தாக்கத்திற்காக மத்திய அரசு 25,000 கோடி ரூபாய்களை செலவிடுவதைப் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் ஆப்டிக் பைபர் கேபிள்களை பதிக்கும் பணிக்காகத்தான் இந்த நிதியில் பெரும்பாலான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒரு சிறிய தொகை மட்டுமே BSNLக்கு லாபமாக கிடைக்கும். BSNLன் புத்தாக்கத்திற்கு இந்த திட்டங்கள் பெரிய அளவில் உதவி செய்யாது. 24.02.2018 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNLதலைவர்களிடம் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்தபடி BSNL நிறுவனத்திற்கு BSNL நிறுவனம் ஏற்கனவே DOTயிடம் வழங்கியுள்ள முன்மொழிவை ஏற்று BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவது தான் BSNL புத்தாக்கம் செய்வதற்கு அரசு செய்ய வேண்டிய ஒன்று.