Tuesday, 3 April 2018

வேலூர் மாவட்டம் முதலிடம் :

அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே!! 

          வேலூர் தொலை தொடர்பு மாவட்டம் அகில இந்திய அளவில் இந்த ஆண்டு    மார்ச்    மாதத்தில்    மட்டும்    4728    தரை    வழி     இணைப்புகள்  கொடுத்ததின்  விளைவாக  முதலிடம்  கிடைக்க பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம் .

          மேலும்  BB  1633   இணைப்புகள்  கொடுத்து  இலக்கினை விஞ்சியுள்ளோம் ,  மார்ச்    மாதத்தில்  MOBILE  SIM  CARD  34135 விற்க்கப்பட்டுள்ளது .

          முதலிடம்    பெறுவதற்கான    வாய்ப்பினை     அனைத்து   ஊழியர்கள் , அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டு ROAD SHOW, CSC, MELA மற்றும் பிரச்சாரம்   என  பல்வேறு   பணிகளில்   ஈடுபட்டதின்   விளைவாக பெற்றுள்ளோம் .

           இதற்கான    ஊக்குவிப்பினை    வழங்கிய     PGM    களப்பணியாற்றிய  ஊழியர்கள், அதிகாரிகள்,  மற்றும் ஒப்பந்த  ஊழியர்களுக்கும்  மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும்   தெரிவித்து    கொள்கின்றோம்.    இந்த  முன்னேற்றம்   கூட்டு  முயற்சிக்கும்,  உழைப்பிற்கும்  கிடைத்த வெற்றியாகும் .

          வேலூர் மாவட்டத்தில் BSNL-ஐ  ஐ வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிடவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை கொடுத்திடவும் தொடர்ந்து உழைத்திடுவோம் . BSNL-ஐ  பாதுகாப்போம் .Thursday, 22 March 2018

தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு CHECK OFF முறை தேவையில்லை!!

அடுத்த தொழிற்சங்க அங்கீகார தேர்தலை CHECK OFF முறையில் நடத்துவது என்ற முன்மொழிவை கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் 15.03.2018 அன்று ஒரு கடிதம் மூலம் அனுப்பி, அது தொட்ர்பாக அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுள்ளது. ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்திற்காக ஏழு அங்கீகார தேர்தல்களை ரகசிய வாக்கெடுப்பு முறைப்படி BSNL நிர்வாகம் நடத்தியுள்ளது. இவற்றில் இது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. ஆனால் நிர்வாகம் BSNL நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியை காரணம் சொல்லி தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. அதனை விடுத்து தேவையற்ற செலவினங்களை குறைக்க ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களுடன் அக்கறையுடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தையினை நிர்வாகம் நடத்தட்டும். CHECK OFF முறையில் சங்க அங்கீகாரத்தை முடிவு செய்ய நினைக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் மிக கடுமையாக எதிர்க்கும். அது முறைகேட்டிற்கும் தில்லுமுல்லுகளுக்கும் வழி வகுக்கும். எனவே இதனை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. நிர்வாகம் அதனை ஏற்கவில்லை என்றால்அதற்கு எதிராக போராடவும் BSNL ஊழியர் சங்கம் தயங்காது. 

36ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தை தன்னிச்சையாக நிர்ணயம் செய்யாதீர்

BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு அகர்தலாவில் 03.04.2018 முதல் 05.04.2018 வரை நடைபெறும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. ஆனால் 36ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தை 05.04.2018 அன்று நடைபெறும் என கார்ப்பரேட் நிர்வாகம் 15.03.2018 அன்று அறிவிப்பு கொடுத்துள்ளது. முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மத்திய செயற்குழு நடைபெறும் தேதியில் தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு கொடுத்துள்ளது என்பது கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பகுதியின் செயல்பாட்டை தெரிவிக்கிறது. நமது பொது செயலாளர் இவற்றை சுட்டிக்காட்டி, தேசிய கவுன்சில் கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளார். 

ஊதிய மாற்றம் தொடர்பாக DIRECTOR(PSU) DOT உடன் சந்திப்பு

24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் BSNL ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையை மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்வதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். அந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. எனவே இந்த பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக தெரிந்துக்கொள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் திரு பவன் குப்தா DIRECTOR(PSU), DOT அவர்களை 15.03.2018 அன்று சந்தித்து விவாதித்தனர். தற்போது DPEயின் ஒப்புதலை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இறுதியாக அனுப்பப்படுவதற்கு முன் மேலும் பல நடைமுறைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணிகளை எல்லாம் விரைவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென DIRECTOR(PSU) அவர்களை வலியுறுத்தி உள்ளனர். 

BSNLன் புத்தாக்கத்திற்கு அரசின் புதிய திட்டங்கள்?

BSNLன் புத்தாக்கத்திற்காக 25,000 கோடி ரூபாய்களுக்கான அரசின் திட்டங்கள் BSNLக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் 09.03.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பரவலாக பல பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளில் வெளி வந்துள்ளது. இந்த செய்தி, ஏதோ அரசாங்கம் BSNLன் புத்தாக்கத்திற்காக மத்திய அரசு 25,000 கோடி ரூபாய்களை செலவிடுவதைப் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் ஆப்டிக் பைபர் கேபிள்களை பதிக்கும் பணிக்காகத்தான் இந்த நிதியில் பெரும்பாலான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒரு சிறிய தொகை மட்டுமே BSNLக்கு லாபமாக கிடைக்கும். BSNLன் புத்தாக்கத்திற்கு இந்த திட்டங்கள் பெரிய அளவில் உதவி செய்யாது. 24.02.2018 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNLதலைவர்களிடம் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்தபடி BSNL நிறுவனத்திற்கு BSNL நிறுவனம் ஏற்கனவே DOTயிடம் வழங்கியுள்ள முன்மொழிவை ஏற்று BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவது தான் BSNL புத்தாக்கம் செய்வதற்கு அரசு செய்ய வேண்டிய ஒன்று.

Friday, 23 February 2018

DOT செயலருடன் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் சந்திப்பு....

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA மற்றும் தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA ஆகியோர் DOT செயலாளர் திருமிகு அருணா சுந்தர் ராஜன் அவர்களை 20.02.2018 அன்று சந்தித்து நமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் படி வலியுறுத்தினர். குறுகிய காலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நமது தலைவர்கள் 3வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக குறிப்பாக வலியுறுத்தினர். நமது தலைவர்களின் கோரிக்கைகளை அக்கறையுடன் கவனித்த DOT செயலாளர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி மற்றும் ஊழியர் சேமநலநிதிக் கூட்டம்...

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் தோழர் P. அபிமன்யு மற்றும் தோழர் ஜான் வர்கீஸ் AGS BSNLEU ஆகியோர் 20.02.2018 அன்று CMD BSNL அவர்களை சந்தித்து ஓய்வூதியர்களுக்கு வவுச்சர் இல்லாமல் மருத்துவ படி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து அமலாக்க வேண்டும் என்றும், வெகு நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் சேம நலநிதிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நமது கோரிக்கைகளில் உடனடியாக ஆவன செய்வதாக CMD BSNL உறுதி அளித்துள்ளார்.

சஞ்சார் பவன் நோக்கிய பேரணிக்கு தமிழக தோழர்கள்....

01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும், BSNL நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 23.02.2018 அன்று நடைபெற உள்ள சஞ்சார் பவன் நோக்கிய பேரணியில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக 120க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்க உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து தோழர்கள் சூசை மரிய அந்தோனி, மெய்யப்பன் கிறிஸ்டோபர், பழனிச்சாமி, சமுத்திரக்கனி ஆகிய தோழர்களின் தலைமையில் 18.02.2018 அன்று புறப்பட்டுள்ளனர். கோவை, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தோழர்கள் பாலசுப்ரமணியன், கிருஷ்ணன், பாபு ஆகிய தோழர்கள் தலைமையில் 19.02.2018 அன்று புறப்பட்டுள்ளனர். 20.02.2018, 21.02.2018 மற்றும் 22.02.2018 ஆகிய தேதிகளில் இதர பல மாவட்டங்களில் இருந்து தோழர்கள் புறப்பட உள்ளனர். பேரணியில் பங்கேற்க உள்ள தோழர்களுக்கு தமிழ் மாநில சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்களின் STEERING COMMITTEE கூட்டம்

மத்திய பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் Steering Committee கூட்டம் 19.02.2018 அன்று விசாகபட்டினத்தில் நடைபெறுகிறது. BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக உள்ளதால் அவரும் பங்கேற்க உள்ளார். பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்கள் சந்திக்கும் இன்றைய சவால்களான பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை விரோத கொள்கைகள் தொடர்பாக இந்தக் கூட்டம் விவாதிக்க உள்ளது.

Wednesday, 31 January 2018

தமிழக சத்தியாகிரகத்தின் முதல் நாள் :

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை- அடைந்தே தீருவோம். BSNL எங்கள் உயிர் மூச்சு- அதனை காத்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் துவங்கிய 5 நாட்கள் சத்தியாகிரகத்தின் (30.01.2018) முதல் நாள் தமிழக காட்சிகள்  
  
<<காட்சிகள் 1 >> <<காட்சிகள் 2 >>  << காட்சிகள் 3 >> 

சுற்றறிக்கை எண்:46


வெற்றிகரமாக்குவோம் இயக்கங்களை! 
வென்றடைவோம் கோரிக்கைகளை.

மத்திய சங்கத்தின் புதிய இணையதளம்:

மத்திய சங்கத்தின் புதிய இணைய தள முகவரி www.bsnleu.in நாளைய தினம் (23.01.2018) முதல் இந்த இணையதளம் மட்டுமே மத்திய சங்கத்தின் இணையதளமாக இருக்கும். பழைய இணையதளம் செயல்படுத்தப்பட மாட்டாது. எனவே தோழர்கள் மத்திய சங்கத்தின் செய்திகளுக்கு புதிய இணையதளமான www.bsnleu.in என்ற முகவரியில் பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Monday, 29 January 2018

Friday, 26 January 2018

Image result for republic day 2018

Saturday, 13 January 2018

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள்.

 இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் 

அதிர்ஷ்டமும்  பெற்று வாழ 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!பாண்டிச்சேரியில் 07.01.2018 அன்று நடைபெற்ற நேரடி நியமன JEக்களின் கருத்தரங்கத்தின் மேலும் சில காட்சிகள்

பாண்டிச்சேரியில் 07.01.2018 அன்று நடைபெற்ற நேரடி நியமன JEக்களின் கருத்தரங்கத்தின் மேலும் சில காட்சிகள்  << மேலும் படிக்க >>

ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து தீவிரமான போராட்டங்கள் மற்றும் சில செய்திகள்

ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 
தீவிரமான போராட்டங்கள் மற்றும் சில செய்திகள். << மேலும் படிக்க >>

Monday, 1 January 2018


****  Happy Near Year  2018  ****

May the New Year  bring Joy, peace & Happiness to you & your entire family
.

Wednesday, 13 December 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL VELLORE SSA

  வீர வாழ்த்துக்கள் 

            மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12 & 13 தேதிகளில் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 98.4 %  ஊழியர்கள் பங்கேற்று  வேலை நிறுத்தத்தை  வெற்றி பெற செய்த அனைத்து தோழர் தொழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் போராட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

    

     கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை      தொடர்ந்து போராட சபதம் ஏற்போம் ! 


   தோழமையுள்ள              

                                                                                          மாவட்ட செயலர்          

 13/12/2017         


Tuesday, 12 December 2017

பொது மேலாளர் அலுவலகத்தில் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது

பொதுமேலாளர் அலுவலகத்தில் டிசம்பர் 12&13 

வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது.

வெற்றிகரமாக்குவோம் வேலை நிறுத்தத்தை

டிசம்பர் 12, 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்து சங்கங்களின் கிளை மட்டம் முதல் அகில இந்திய மட்டம் வரையில் உள்ள தலைவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற உணர்வோடு நமது ஊழியர்களும் அதிகாரிகளும் இதுவரை இல்லாத அளவில் இந்த போராட்டத்திற்கு தங்களின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டி வருகின்றனர். அகில இந்திய அளவிலும் மாநில மட்டத்திலும், ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று நள்ளிரவு 00.00 மணி முதல் நாளை மறு நாள் நள்ளிரவு 24.00 வரை வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும். கிளை மற்றும் மாவட்ட மட்டங்களில் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கான இறுதி கட்ட முயற்சிகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும். நமது நியாயமான உரிமையான 01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை பெற்றிடவும், நமது கடமையான BSNL நிறுவனத்தை காப்பதற்காக துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்திடவும் இந்த வேலை நிறுத்தத்தினை முழு வெற்றி பெறச் செய்திடுவோம். 

 போராட்ட வாழ்த்துக்கள்.

Wednesday, 22 November 2017

மனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது:

01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக 30.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது மற்றும் 23.11.2017 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்துவது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Monday, 20 November 2017

தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்

தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் 14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் தருவது, மனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. << மேலும் படிக்க >>.